Homeசெய்திகள்12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சோமாசிபாடி ஏரி

12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சோமாசிபாடி ஏரி

திருவண்ணாமலை எஸ்.பி அரவிந்த் உத்தரவின்படி¸ ஏ.டி.எஸ்.பி அசோக் குமார் மேற்பார்வையில்¸ திருவண்ணாமலை ஏ.எஸ்.பி கிரண் ஸ்ருதி தலைமையில் திருவண்ணாமலை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் பெரிய கோலாப்பாடி பகுதியில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது வேகமாக வந்த மகேந்திரா பொலிரோ வேன் மற்றும் இண்டிகா கார் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தினர். 2 வாகனங்களிலும் பூ முட்டைகளை அடுக்கி அதன் அடியில் ஹான்ஸ் குட்கா பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2லட்சத்து 75ஆயிரம் ஆகும். 

கடத்தலில் ஈடுபட்ட அய்யம்பாளையம் புதூரைச் சேர்ந்த பாலாஜி(31)¸ பள்ளிப்பட்டைச் சேர்ந்த சந்திரன்(43)¸ துர்க்கைநம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த முருகதாஸ்(30)¸ செங்கம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்¸ காதர் சபி¸ நவ்ஷத் அலி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிரு;நது ரூ.12 லட்சம் ரொக்கப் பணம்¸ ரூ.6 லட்சம் மதிப்புள்ள வேன் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

See also  கலெக்டர் மாற்றம் ஏன்?

துடிப்பான இளம் பெண் அதிகாரியான கிரண் ஸ்ருதி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட பெரிய வேட்டை இது என்பது குறிப்பிடத்தக்கது. கிரண் ஸ்ருதியின் அதிரடி நடவடிக்கை கடத்தல்காரர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!