மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

Date:

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

திருவண்ணாமலையில் மினரல் வாட்டர் கம்பெனியில் நிலத்தடி நீர் எடுப்பதற்காக லஞ்சம் வாங்கிய நீர்வள அதிகாரி கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை செங்கம் ரோட்டில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிலநீர் நிலவியல் பிரிவு(Ground Water Section) செயல்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை, தனியாக பிரிக்கப்பட்ட நீர்வளத்துறையின் கீழ் தற்போது இயங்கி வருகிறது.

நிலத்தடி நீரை பரிசோதிப்பது, பாசன கிணறுகளை கணக்கெடுப்பது, போர் போடுவதற்கு கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு தடையில்லா சான்று வழங்குவது, மினரல் கம்பெனிகளுக்கு நிலத்தடி நீர் எடுக்க அனுமதி வழங்குவது போன்ற பணிகளை இத்துறை மேற்கொண்டுள்ளது.

இங்கு திருச்சி பெரம்பலூரைச் சேர்ந்த சிந்தனைவளவன்(வயது 50) என்பவர் உதவி நிலவியலாளராக கடந்த 3 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். குடும்பம் பெரம்பலூரில் இருக்க இவர் மட்டும் திருவண்ணாமலை துர்க்கையம்மன் கோயில் தெருவில் ரூம் எடுத்து தங்கி உள்ளார்.

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவைச் சேர்ந்த பிரபல வாணக்கடை அதிபர் லாலின் மகன் லியாகத் அலி(வயது 46) என்பவர், திருவண்ணாமலை காஞ்சி ரோட்டில் சோலா என்ற பெயரில் மினரல் வாட்டர் கம்பெனியை நடத்தி வருகிறார். இதற்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதி கேட்டு திருவண்ணாமலையில் உள்ள அலுவலகத்தில் மூன்று முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் கையூட்டு கொடுக்காததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து வியாகத் அலி சென்னையில் உள்ள நிலநீர் பிரிவு தலைமை அலுவலகத்திற்கு கடந்த 15ந் தேதி விண்ணப்பித்திருந்தார்.

See also  ஆபரேஷன் செய்யப்பட்ட பெண் பலி-உறவினர்கள் போராட்டம்

இதன் பேரில் கடந்த 23ந் தேதி அந்த கம்பெனிக்கு சென்ற உதவி நிலவியலாளர் சிந்தனைவளவன், ஆய்வு நடத்தினார். பிறகு அனுமதி வழங்க ரூ.9லட்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு லியாகத் அலி ஒத்துக் கொள்ளவில்லை. பைனலாக ரூ.3லட்சம் தர வேண்டும் என சொல்லி விட்டு சென்றாராம். அவரது பெயருக்கு ஏற்ப தொகையையும் வளமாக கேட்டதால் லியாகத் அலி அதிர்ச்சி அடைந்தார்.

மினரல் வாட்டர் கம்பெனியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

லஞ்சம் தர விருப்பம் இல்லாததால் லியாகத் அலி இது சம்மந்தமாக திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். போலீசாரின் ஏற்பாட்டின் படி ரூ.3லட்சத்தில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் தருவதாக சிந்தனைவளவனிடம், லியாகத் அலிகான் கூறி கம்பெனிக்கு வருமாறு அழைத்தார்.

பணம் கிடைக்க போகிற மகிழ்ச்சியில் சென்ற சிந்தனைவளவனுக்கு கடைசியாக காப்புதான் கிடைத்தது. சோலா கம்பெனிக்கு சென்று கைரேகை பதியக் கூடிய ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற போது சிந்தனைவளவனை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. திருவேல்முருகன் தலைமையிலான போலீசார் கையுங்களவுமாக பிடித்து கைது செய்தனர்.

See also  பெட்ரோல் பங்கில் ரூ.40 லட்சம் மோசடி செய்தவருக்கு ஜெயில்

அவரை போலீசார் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் நிலத்தடி நீர் எடுக்க விண்ணப்பித்திருந்த 74 மின்னல் வாட்டர் கம்பெனிகளில் “தன்னை கவனித்த” 4 கம்பெனிகளுக்கு மட்டுமே அவர் அனுமதி வழங்கி இருப்பது தெரிய வந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருவண்ணாமலை கோயிலில் செல்போனுக்கு தடையா?

திருவண்ணாமலை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக சேகர்பாபு கூறியதற்கு உள்ளூர்...

திருவண்ணாமலைக்கு ரயில்-ஆந்திரா,தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையிலிருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு 723 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு ரயில்...

கொள்ளை போகும் கனிமங்கள்-பல கோடி ரூபாய் இழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 200க்கும் மேற்பட்ட குவாரிகளால்...

எ.வ.வேலு புகார்-முதல்வரால் மாற்றப்பட்ட அதிகாரி யார்?

ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. விழாவினை தமிழக...

மலை ஆக்கிரமிப்பு-வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்

திருவண்ணாமலை மலை மீது கணக்கெடுக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யுமாறு தாசில்தார் நோட்டீஸ்...

மலை ஆக்கிரமிப்பு-கோர்ட்டு உத்தரவு என்ன? யானை ராஜேந்திரன் தகவல்

திருவண்ணாமலை மலை மீது 1535 வீடுகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து...
error: Content is protected !!